3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மானூர் அருகே உள்ள காசிங்கத்தான்குறிச்சி, காசிலிங்க புரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 23), நெல்லை சந்திப்பு முத்து (20) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று மாரிசெல்வம், முத்து ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சபாபதி நேற்று வழங்கினார்.
இதேபோல் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம், மேட்டுக்குடியை சேர்ந்த காளிமுத்து (19) என்பவர் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காளிமுத்து குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை சிறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.