கடையில் திருடிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


கடையில் திருடிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 July 2023 3:00 AM IST (Updated: 26 July 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் கடையில் திருடிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடைக்கு அருகே உள்ள வீட்டில் மதுரை செல்லூரை சேர்ந்த ஜெயராமன் (வயது 24) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். அவர் அடிக்கடி சுதாவின் கடைக்கு வந்து பல சரக்கு பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் 4-ந்தேதி இரவு சுதா கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் காலையில் கடையை திறக்க அவர் வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் திருடு ேபாய் இருந்தது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஜெயராமனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது கொடைக்கானல் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்ட ெஜயராமனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டதவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை என்று நீதிபதி கார்த்திக் தீர்ப்பு அளித்தார்.


Next Story