வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x

நகை பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகாசி கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்

சிவகாசி,

நகை பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகாசி கோர்ட்டு உத்தரவிட்டது.

நகை பறிப்பு

சிவகாசி சர்க்கரை வாவா தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 56). இவர்கள் இருவரும் கடந்த 14.4.2019 அன்று இரவு மருதுபாண்டியர் மடத்து கிழக்கு தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சீதாலட்சுமி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சித்துராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் என்கிற குட்டை முருகன் (22) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கு சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் ராஜேஷ் கண்ணன் விசாரித்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் என்கின்ற குட்டை முருகனுக்கு 3 வருட சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார்.


Related Tags :
Next Story