சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
x

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). இவர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார். இதில் செல்வராஜிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைதண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். மேலும் இவ்வழக்கினை புலன் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் லதா மற்றும் நீதிமன்ற பணிக்கான முதல் நிலைகாவலர் ஏட்டு சீதாலெட்சுமி ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பாராட்டினார்.


Related Tags :
Next Story