குட்கா விற்ற 3 பேர் கைது


குட்கா விற்ற 3 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையையொட்டி உள்ள பாப்பன்குப்பம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பாப்பன்குப்பம் பகுதியில் 2 பெட்டி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட 40 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே போல பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள மற்றொரு பெட்டி கடையில் நடத்திய சோதனையில் 22 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா பொருட்களை விற்பனை செய்த வடமாநிலத்தை சேர்ந்த ரமேஷ் முகாந்தி (வயது 33), விசாஸ் குமார் (21), அபினேஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story