ராஜாக்கமங்கலம் அருகேமது விற்ற 3 பேர் கைது


ராஜாக்கமங்கலம் அருகேமது விற்ற 3 பேர் கைது
x

ராஜாக்கமங்கலம் அருகேமது விற்ற 3 பேர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று ராஜாக்கமங்கலம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் மதுபான பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பரமார்த்தலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆலங்கோட்டை புதூர் மதுபான பாரில் மது விற்பனை செய்த நாகராஜன் என்பவரை கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல ராஜாக்கமங்கலம் பன்றி குடோன் ரோட்டில் மது விற்ற ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 43) என்பவரை கைது செய்து 111 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த 3 பகுதிகளிலும் இருந்து மொத்தம் 156 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story