மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x

மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

பேரையூர்

சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில், பெரியகட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45), கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (30), உசிலம்பட்டி தாலுகா பாரைப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (41) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 123 மது பாட்டில்களை கொண்டு சென்றனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story