வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்;பெண் உள்பட 3 பேர் கைது


வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்;பெண் உள்பட 3 பேர் கைது
x

திசையன்விளை அருகே வாடகை வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே வாடகை வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த செல்வமருதூரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திசையன்விளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ரவி மனைவி முத்துலட்சுமி (வயது 39), திசையன்விளை கக்கன் நகரைச் சேர்ந்த இந்திரன் (22), குட்டிகலியன் விளையைச் சேர்ந்த பெருமாள் சதீஷ் (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

வாடகை வீடு எடுத்து...

செல்வமருதூரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்த முத்துலட்சுமி, அங்கு வெளியூர்களில் இருந்து இளம்பெண்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதற்காக முத்துலட்சுமி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது வீட்டில் அழகான இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைப்பு விடுத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கைதான முத்துலட்சுமி உள்ளிட்ட 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட் டனர்.


Next Story