வாலிபர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே வாலிபர் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் பிள்ளையார் கோவில் அருகே கடந்த 4-ந் தேதி அகரம் ஊரை சேர்ந்த வெற்றிவேல் மகன் அஜித்குமார் (வயது 24) என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏரல் அகரம் பகுதியை சேர்ந்த துரைப்பழம் மகன் பாலமுருகன் (எ) அட்டாக் (36), தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (19), கோவங்காடு ஊரை சேர்ந்த ராஜன் மகன் அயன்ராஜ் (21) ஆகிய 3 பேரையும் ஏரல் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏரல் இன்ஸ்பெக்டர் வழங்கினார்.


Next Story