வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது


வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது
x

காஞ்சீபுரத்தில் வழிப்பறி வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி நடைபெறுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உரிய நடவடிக்க எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் துளசி, போலீஸ் ஏட்டு முரளி மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் சதாவரத்தை சேர்ந்த தனா என்ற தனசேகரன் (வயது 37), தென்னேரி பகுதியை சேர்ந்த கோடீஸ்வரா (37) மற்றும் காஞ்சீபுரம் ஓக்கபிறந்தான் குளம் பகுதியை சேர்ந்த மீஷா என்கிற கோபி (36) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் தனசேகரன் மீது ஏற்கெனவே விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் 2012-ம் ஆண்டு 4 வழக்குகள் உள்ளது.

அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 7 பவுன் தங்க நகை, 3 செல்போன்கள், 2 மோட்டாக்சைக்கிள்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story