ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது


ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
x

நெல்லை பேட்டையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை சுந்தர விநாயகர் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 21). ஆட்டோ டிரைவர். இவர் தனது நண்பர் விஜி என்பவருடன் வ.உ.சி திடல் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த ராஜேஷ் (21), இசக்கி சதீஷ் (20) மற்றும் வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய 3 பேர் சேர்ந்து தங்கள் பகுதிக்கு எதற்காக வந்தாய் என்று மிரட்டி ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்தனர்.

இதுகுறித்து இளவரசன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உட்பட மூன்று பேரை நேற்று கைது செய்தனர்.


Next Story