டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள வடக்குப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45). டிரைவர். இவருக்கும் மேலகோத்திராப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ராஜ்குமார், சக்திவேல் (25), பாலசுப்பிரமணியன் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருப்பதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த திருப்பதி இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், சக்திவேல், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story