நாட்டு துப்பாக்கியால் சுட்டு மிளா வேட்டை; 3 பேர் கைது
கடையநல்லூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டு மிளா வேட்டை- 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனச்சரகம் கருப்பாநதி அணை அருகில் வைரவன்குளம் பீட் மல்லி காடு பகுதியில் கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், சிறப்பு பிரிவு வனவர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சொக்கம்பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் முருகையா பாண்டியன் (வயது 37), நெல்கட்டுச் செவலைச் சேர்ந்த குருநாதன் மகன் சாமிதுரை (19), அதே ஊரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் இளங்காமணி (32) ஆகியோர் வன விலங்குகளை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டும், கத்தி, அரிவாள் ஆகியவற்றை பயன்படுத்தியும் வேட்டையாடியது தெரியவந்தது. மிளாவின் தலையுடன் கூடிய இறைச்சி பாகங்களை கொண்டு வந்த அவர்களிடம் இருந்து இறைச்சி மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.