பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் இலவச பயிற்சி வகுப்பு வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சியில் படித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற 27 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது இதை வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 பேருக்கு தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.53 ஆயிரத்து 500 மதிப்பிலான காதொலி கருவிகள், 11 பேருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திறன் பேசிகள் ஆக மொத்தம் ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story