மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற 3½ லட்சம் மாணவிகள் விண்ணப்பம் கல்வித்துறை தகவல்


மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற 3½ லட்சம் மாணவிகள் விண்ணப்பம் கல்வித்துறை தகவல்
x

மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற 3½ லட்சம் மாணவிகள் விண்ணப்பம் கல்வித்துறை தகவல்.

சென்னை,

பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்திருக்கும் மாணவிகள் தங்களுடைய விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பதிவுகளை மேற்கொள்ள கடந்த மாதம் (ஜூன்) 30-ந்தேதி வரை முதலில் அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் அதை ஜூலை 10-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் மாணவிகள் பலர் தங்களுடைய விவரங்களை படித்த கல்லூரிகள் மூலமாகவும், நேரடியாக இணையதளங்கள் வாயிலாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 304 மாணவிகள் தங்களுடைய விவரங்களை விண்ணப்பப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாணவிகள் விவரங்களை பதிவு செய்வதற்கு கடைசி நாள் என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும், தகுதியுள்ள மாணவிகள் அனைவரையும் பதிவு செய்ய வைத்து, அவர்களை இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய செய்வதே எங்களுடைய நோக்கம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story