அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு
சின்னசேலம் அருகே மருத்துவ படிப்பு சேர்கைக்கு தேர்வாகி உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 3 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சரஸ்வதி பராட்டினார்
சின்னசேலம்
அரசு மேல்நிலைப்பள்ளி
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுகீட்டக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்.சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாணவர் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியிலும், மாணவர் கருப்பையா திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியிலும், மாணவர் அருண்குமார் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியிலும் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாராட்டு
இதையடுத்து 3 மாணவர்கள் மற்றும் இவர்கள் நீட் தேர்வில் தோ்ச்சி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோரை கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜு ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்த ஆண்டு இதை பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் அதே பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை பெற தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.