செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்


செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
x

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டிப்போட்டு விட்டு 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்த மாணவர்கள் 5 பேர் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து ஆகிரியர்கள் குணசேகரன் மற்றும் பாபு ஆகியோரை கட்டிப்போட்டு விட்டு போர்வையால் மூடி செங்கற்களால் தாக்கிவிட்டு 5 சிறுவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதில் 2 சிறுவர்களை பிடித்து மீண்டும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

காயமடைந்த 2 ஆசிரியர்களும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடிக்கடி பணியாளர்கள், ஆசிரியர்கள், நர்சுகள், டாக்டர்கள் எலக்ட்ரீசியன், சமையலர்கள் என பலரை தாக்கி விட்டு தப்பிச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். இல்லை என்றால் சிறுவர்கள் இடையே தாக்கி கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் நேரத்தை பயன்படுத்தி தப்பி செல்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிப்பதாக தாசில்தார் மற்றும் போலீசார் உறுதியளித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் தப்போது வரை பாதுகாப்பு பணியில் போலீசார் நியமிக்கப்படவில்லை. உடனடியாக பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story