குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 3 காட்டெருமைகள்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 3 காட்டெருமைகள்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sept 2023 1:30 AM IST (Updated: 22 Sept 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட 3 காட்டெருமைகளால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே சாலையின் நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட 3 காட்டெருமைகளால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆக்ரோஷ ேமாதல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக காட்டெருமைகள் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குன்னூரிலிருந்து கரோலினா கிராமத்திற்கு செல்லும் சாலையில் 3 காட்டெருமைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன. இதனால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றன. இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் வந்த பெண்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு

நீண்ட நேரமாகியும் காட்டெருமைகள் அங்கிருந்து நகராமல் சாலையிலேயே நின்றன. உடனே வாகன ஓட்டிகள் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், காட்ெடருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் காட்டெருமைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்டதோடு, வனத்துறையினரை விரட்டியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இதையடுத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லத்தொடங்கின.


Next Story