சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி 2-ம் நாள் காத்திருப்பு போராட்டம்


சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி 2-ம் நாள் காத்திருப்பு போராட்டம்
x

தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி 2-ம் நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அவர்களிடம் உதவி கலெக்டர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவண்ணாமலை


தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி 2-ம் நாள் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அவர்களிடம் உதவி கலெக்டர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார்.

காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் சாதிச்சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பன்னியாண்டி சமூகத்தினருக்கு பட்டியலின பன்னியாண்டி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும் நடைபெற்றது. நேற்று அவர்கள் 3 வேளையும் தாலுகா அலுவலகத்திற்கே உணவு கொண்டு வந்து சாப்பிட்டு இரவிலும் அங்கேயே தங்கினர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து இன்று காலையிலும் அவர்கள் அங்கேயே உணவு சாப்பிட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மதியம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையிலான வருவாய் துறையினர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story