போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 29 பேருக்கு அபராதம்


போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 29 பேருக்கு அபராதம்
x

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத 29 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை - இட்டமொழி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டிய 15 பேருக்கு அபராதம் விதித்தனர். இதேபோல் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இடையன்குடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 14 பேருக்கு அபராதம் விதித்தனர்.


Next Story