வருகிற 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
இதனை ஈடு செய்யும் விதமாக அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி வருகிற 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடலூர் மாவட்டம் , சிதம்பரம் நடராஜர் கோவில் (சபாநாயகர் கோவில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27.12.2023 (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01.2024 -சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 27.12.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தப்பட்ச பணியாளர்களோடு செயல்படும் '' என கூறப்பட்டுள்ளது.