2,768 மதுபாட்டில்கள் அழிப்பு
மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 2,768 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 2,768 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
மதுபாட்டில்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபானம் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் போலீசார் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சாத்தூர் மதுவிலக்கு பகுதிக்கு உட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ 2.5 லட்சம் மதிப்பிலான 2,004 மது பாட்டில்கள் சாத்தூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
குழி தோண்டி அழிப்பு
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த மே மாதம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 764 மதுபாட்டில்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ 3.5 லட்சம் மதிப்பிலான 2,768 மதுபாட்டில்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் குழிதோண்டி அழிக்கப்பட்டது.