268 போலீசாருக்கு பதவி உயர்வு


268 போலீசாருக்கு பதவி உயர்வு
x

நெல்லை மாவட்டத்தில் 268 போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

தமிழக காவல்துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தலைமை காவலராகவும், 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முதல்நிலை காவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 13 பெண்கள் உள்பட 72 பேருக்கு தலைமை காவலராகவும், 32 பெண்கள் உள்பட 196 பேருக்கு முதல்நிலை காவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டி, வாழ்த்துகள் தெரிவித்தார்.


Next Story