இலங்கைக்கு கடத்திய 255 கிலோ கஞ்சா பறிமுதல்


இலங்கைக்கு கடத்திய 255 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 255 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை கல்பட்டி கடற்கரை பகுதியில் நேற்று அங்குள்ள கடற்படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 255 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்கள் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாகவே இலங்கைக்கு கடத்தி வந்து இருக்கலாம் என தெரிய வந்தது. இதுகுறித்து ராமேசுவரத்தில் உள்ள மத்திய- மாநில உளவுத்துறை போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story