கடற்கரையில் புதைத்து வைத்த 239 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
தொண்டி அருகே கடற்கரையில் புதைத்து வைத்த 239 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டி
தொண்டி அருகே கடற்கரையில் புதைத்து வைத்த 239 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெலட்டின் குச்சிகள்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு பாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் ஜெலட்டின் குச்சிகள் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தொண்டி கடற்கரை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் கியூபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
இதில் பாசிப்பட்டினம் கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் 239 ஜெலட்டின் குச்சிகளை மணலில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் உடனே அந்த ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு, எதற்காக ெஜலட்டின் குச்சிகளை புதைத்து வைத்திருந்தார்? என விசாரித்து வருகின்றனர்.
தொண்டி அருகே கடற்கரை பகுதியில் ெஜலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.