கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் ேததி விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
மேலும் ஏற்கனவே விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும் மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.