பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது" - வைகோ


பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது - வைகோ
x
தினத்தந்தி 18 May 2022 1:37 PM IST (Updated: 18 May 2022 1:37 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கூறுகையில் ;

பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி உள்ளது.என அவர் கூறியுள்ளார் 

Next Story