உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு 60-வது இடம்..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 7:15 PM IST (Updated: 16 April 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு 60-வது இடம் பிடித்துள்ளது.

சென்னை,

உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி 60-வது இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலை வணிக இதழான சிஇஓவேர்ல்டு இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவ கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பிடித்துள்ளது. 

தொடர்ந்து முதல் 21 இடங்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களே பிடித்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவ கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அதன்படி 22-வது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியும், 37-வது இடத்தில் புனே இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியும், 46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை அரசு மருத்துவ கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.

இந்த 5 மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story