கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு


கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 April 2022 4:04 AM GMT (Updated: 16 April 2022 4:04 AM GMT)

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பின் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுவதால் இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது வைகை ஆற்றின் கரை அருகே திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 5-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

மயக்கமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மயங்கமடைந்த எஞ்சியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story