பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு
x
தினத்தந்தி 10 April 2022 4:02 PM IST (Updated: 10 April 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்திற்கு பதிலாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணமானது 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. 
 பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்திற்கு பதிலாக பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என  பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் அறிவித்துள்ளார். 


Next Story