மார்ச் 30-ம் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 2011 முதல் இதுவரை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை
இது குறித்து கடந்த இரு தினங்களுக்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் செல்வம் கூறியதாவது
கவர்னர் உரையுடன் இம்மாத இறுதிக்குள் புதுச்சேரி சட்டசபை கூட்டம் தொடங்கும்.இந்த மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நடைபெற வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்குமாறு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் புதுச்சேரிக்கு ஜல்சக்தி திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கியது. இதில் ரூ.7.5 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
இந்நிலையில் வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடுகிறது
இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது., இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட உள்ளது.
மார்ச் 31-ந்தேதிக்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். கவர்னர் உரையை தொடர்ந்தோ அல்லது மறுநாளிலோ நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3 அல்லது 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
இதன்பின் ஜூன் அல்லது ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகிறது.
Related Tags :
Next Story