ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள் 48 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆவடி,
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 35 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
அதன்பிறகு அ.தி.மு.க.வில் இருந்து 2 கவுன்சிலர்களும், ஒரு சுயேச்சை கவுன்சிலரும் என 3 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் ஆவடி மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.
பதவி ஏற்பு
இந்தநிலையில் ஆவடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவில் ஆவடி மாநகராட்சி உதவி என்ஜினீயர் சத்தியசீலன் வரவேற்றார். பின்னர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 கவுன்சிலர்களுக்கும் ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவுன்சிலர்கள் 48 பேரும் வார்டு வாரியாக ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் நாசர் மற்றும் கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆவடி மாநகராட்சி துப்புரவு அலுவலர் அப்துல் ஜாபர் நன்றி கூறினார்.
ஆவடி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

Related Tags :
Next Story