கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Feb 2022 1:33 PM IST (Updated: 16 Feb 2022 1:36 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணு  மின்நிலையத்தில் உள்ள 2-வது அணு உலையில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக 200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
 
முன்னதாக முதல் அணு உலை குளிரூட்டு கருவி பழுதாகி இரண்டு ஆண்டுகள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றது.

இந்நிலையில்,  அங்கு இயங்கி வந்த ஒரு அணு உலையிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் அளவீட்டில் சிக்கல் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது என அணுமின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story