பாதுகாப்பு கோரி காவல் நிலையம் சென்ற காதல் ஜோடி - போக்சோவில் கைதான காதலன்


பாதுகாப்பு கோரி காவல் நிலையம் சென்ற காதல் ஜோடி - போக்சோவில் கைதான காதலன்
x
தினத்தந்தி 29 Jan 2022 5:17 PM IST (Updated: 29 Jan 2022 5:17 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம்,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த நபர் தனது 17 வயது மகள் காணவில்லை என்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில் நந்தம்பாக்கத்தை சேர்ந்த கரண்(வயது.22), என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். .

போலீசார் விசாரணையில் சிறுமிக்கு 17 வயது என தெரியவந்ததையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  சிறுமியை திருமணம் செய்து கொண்டு தஞ்சமடைய வந்த போலீஸ் நிலையத்திலேயே வாலிபர் கைது செய்யப்பட்ட  வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story