தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்


தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:59 PM (Updated: 18 Jan 2022 6:59 PM)
t-max-icont-min-icon

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விலகல்: தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா நியமனம்.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்டு அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து கட்சியின் சட்டதிட்ட விதிப்படி அவருக்கு பதிலாக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். அதேபோல அயலக அணி செயலாளராக பணியாற்றி வந்த டி.ஆர்.பி.ராஜா, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக எம்.எம்.அப்துல்லா எம்.பி. அயலக அணி செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story