தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்..!


தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்..!
x
தினத்தந்தி 8 Jan 2022 3:58 PM IST (Updated: 8 Jan 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

பயங்கர சத்தம் கேட்டதால், ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

அருப்புக்கோட்டை:

சென்னையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று  இரவு8.25 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை அருகே வந்துகொண்டிருக்கும் போது அதிகாலை காலை 5.05 மணி அளவில் தொட்டியாங்குளம் பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்தபோது மின்சார வயர்கள் அறுந்து இன்ஜினில் சிக்கி இருந்தது தெரியவந்தது. ரயில் ஓட்டுநர் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் இன்ஜினில் சிக்கியிருந்த வயர்களை அகற்றினர்.இதனையடுத்து சுமார் மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.


Next Story