நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலம் : தமிழகத்திற்கு 3-வது இடம்....!
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய ஜல் சக்தி துறை இன்று அறிவித்தது.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை மத்திய ஜல் சக்தி துறை இன்று அறிவித்தது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் உத்தரப்பிரதேசமும் , 2ம் இடத்தில்
ராஜாஸ்தான் உள்ளது.
தமிழகத்திற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.2019 ம் ஆண்டுக்கான நீர் மேலாண்மை விருதுகளில் தமிழகம் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story