இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 52 பேரைை போலீசார் கைது செய்தனர்.
திருக்கடையூர்:
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 52 பேரைை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர்முக்கூட்டு தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் வேதநாயகம் ஆகியோர் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும்.
கோஷங்கள்
தொடர் மழை காலத்தில் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை மாற்றி புதிய வீடு கட்டித்தர வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம்
2020-21-ம் ஆண்டு விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி கொள்ளிடம் கடைவீதியில் சீர்காழி- சிதம்பரம் சாலையில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சிவராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் ஜெயசக்திவேல், தலைவர் கலியமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் தனசேகரன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பிரபு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜிவமணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் கலந்து கொண்ட 35 பேரை கொள்ளிடம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டத்தில் கொள்ளிடம் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story