சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 26 Dec 2021 11:57 AM IST (Updated: 26 Dec 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும்  தானியங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள கூடுதல் நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசர கால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்குகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவருடன்  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

Next Story