செல்லிப்பட்டு படுகை அணை உடைந்தது


செல்லிப்பட்டு படுகை அணை உடைந்தது
x
தினத்தந்தி 21 Nov 2021 11:02 PM IST (Updated: 21 Nov 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

செல்லிப்பட்டு படுகை அணையை முறையாக பராமரிக்காமல் விட்டதால் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

செல்லிப்பட்டு படுகை அணையை முறையாக பராமரிக்காமல் விட்டதால் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
படுகை அணை
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அணையின் நடுப்பகுதி சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள்       தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆற்றில் வெள்ளம்
இந்தநிலையில் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால்   சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் ஏற்கனவே சேதமடைந்து இருந்த அணையின் நடுப்பகுதியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அணையை பாதுகாக்க தவறியதால் அணை உடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் சில விவசாயிகள் அணை உடைந்ததை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Next Story