திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்றுமுதல் அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்றுமுதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் நடந்தது.
7-ம் திருநாளான நேற்று 108 மகாதேவர் சன்னதி முன்பாக எழுந்தருளிய சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாகவும் 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story