சாலைகள் முழுவதும் அடைப்பு: தனி தீவாக மாறிப்போன வடபெரும்பாக்கம்
சாலைகள் முழுவதும் அடைப்பு: தனி தீவாக மாறிப்போன வடபெரும்பாக்கம் குடியிருப்புவாசிகள் தவிப்பு.
சென்னை,
சென்னை மாதவரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் பாதையில் வடபெரும்பாக்கம் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் வரும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதுமே நீரால் சூழப்பட்டு உள்ளன.
குடியிருப்புகள் உள்ள பகுதிகளும் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டன. குறிப்பாககுடியிருப்புகளையும், மெயின் ரோட்டையும் இணைக்கும் இணைப்பு சாலைகளும் மழையால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன. இதனால் சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட வடபெரும்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதுமே மழைநீர் குளம்போல தேங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதி தனி தீவு போலவே காட்சி அளிக்கிறது.
இங்குள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்திருக்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் கடும் சிரமத்தை அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களில் மழையின் பிடியில் இப்பகுதி சிக்கி என்ன ஆக போகிறதோ? என்ற பீதியிலேயே மக்கள் இருக்கிறார்கள்.

Related Tags :
Next Story