தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:14 PM IST (Updated: 9 Nov 2021 12:14 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.

விழுப்புரம்,

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இதை அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார். இந்நிலையில் தளவானூர் அருகே தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. 

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் மோகன், அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த தடுப்பணையில் 2-வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story