13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்


13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:49 PM IST (Updated: 8 Nov 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையானது கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் தவித்து வருகிறது. 

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையமானது அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கரூர், திருச்சி, ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Next Story