அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தகவல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக அரசு சார்பில், ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளை அண்மையில் நீதியரசர் முருகேசன் தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை 1.49 சதவீதமாக இருந்ததாகவும், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை 0.83 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அண்ணா பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 5.26 சதவீதமாக இருந்ததாகவும், அதுவே 2020-21 ஆம் கல்வி ஆண்டில் 5.17 சதவீதமாக குறைந்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story