தமிழகத்தில் இருந்து 4 மாதங்களுக்கு பிறகு ஆந்திரா, கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்து பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சென்னை,
இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இந்தநிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து கடந்த 21-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பஸ் போக்குவரத்தை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்கவும் அவர் உத்தரவிட்டார்.
நள்ளிரவு முதல்
புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்க தொடங்கியது.
அந்தவகையில், கர்நாடக மாநிலத்துக்கு 606 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 464 பஸ்களும், ஆந்திர மாநிலத்துக்கு 242 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 194 பஸ்களும் இயக்கப்பட்டன.
பயணிகள் மகிழ்ச்சி
பொதுமக்களும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆர்வமாக பஸ்களில் பயணம் செய்தனர். சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவில் பயணிகள் பயணம் செய்தனர்.
முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு ரெயில்களை மட்டுமே நம்பியிருந்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறினர்.
கூடுதல் பஸ்கள் இயக்கம்
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அரசு விதித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படவில்லை. மாறாக சாதாரண வகை பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தயார்நிலையில் உள்ளது என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மண்டலம்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெங்களூருவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. தொடக்கத்தில் குறைவாக இருந்த பயணிகள் கூட்டம், பின்னர் அதிகரித்தது. வேலூர் மக்கானில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி, சித்தூர், காளஹஸ்திக்கு 27 அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் மண்டலத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்ற பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் ஏற்றப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் இருந்தும் வேலூர் மாவட்டத்துக்கு அம்மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கர்நாடகாவில் இருந்து பஸ் போக்குவரத்து
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நேற்று காலை 6 மணி முதல் பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனாலும் அந்த பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் சென்றனர்.
ஈரோட்டில் இருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்தும் மைசூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை
தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில், கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அம்மாநில எல்லைகள் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Tags :
Next Story