மத்திய மந்திரியாகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
43 புதிய மத்திய மந்திரிகள் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரிசபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.
இந்தசூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கிற வகையில் மத்திய மந்திரிசபையை விஸ்தரிக்கவும், மாற்றியமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதையொட்டி அவர் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று முன்தினமும் அமித் ஷா, பா.ஜ.க. பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். விரிவாக்கப்பட்ட புதிய மந்திரிசபை இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்தசூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தநிலையில், தற்போது ஏ.என்.ஐ செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் 42-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய மந்திரியாகியுள்ளநிலையில் தமிழக பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல். முருகன் பங்கேற்றதால் அவர் மந்திரியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
43 leaders to take oath today in the Union Cabinet expansion. Jyotiraditya Scindia, Pashupati Kumar Paras, Bhupender Yadav, Anupriya Patel, Shobha Karandlaje, Meenakshi Lekhi, Ajay Bhatt, Anurag Thakur to also take the oath. pic.twitter.com/pprtmDu4ko
— ANI (@ANI) July 7, 2021
Related Tags :
Next Story