கோவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு ரெயில் - வாரத்தில் 4 நாட்கள் இயக்கம்
கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருப்பூர்,
கோவையில் இருந்து திருப்பதிக்கு வியாழன், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு ரெயில் (எண்.06194) இயக்கப்படுகிறது. 9-ந் தேதி முதல் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து காலை 6 மணிக்கு இந்த ரெயில்புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.
இந்த ரெயில் திருப்பூருக்கு 6. 43 மணிக்கும், ஈரோடுக்கு 7.25 மணிக்கும், சேலத்துக்கு 8.22 மணிக்கும் வந்து செல்கிறது. இதுபோல் திருப்பதியில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்கள் ரெயில் (06193) இயக்கப்படுகிறது.
வருகிற 10-ந் தேதி திருப்பதியில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 10.55 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரெயில் சேலத்துக்கு இரவு 7.37 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.37 மணிக்கும், திருப்பூருக்கு 9. 23 மணிக்கும், கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 10.19 மணிக்கும் சென்றடைகிறது. இந்தத் தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story