ஏ.டி.எம். கொள்ளையனிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு


ஏ.டி.எம். கொள்ளையனிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2021 1:13 AM IST (Updated: 26 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். கொள்ளையனிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு.

பூந்தமல்லி,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.இந்த கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையனான அமீர் (வயது 37) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை அழைத்து வரப்பட்டு, கோர்ட்டு காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அமீரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ராயலா நகர் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்கள் அமீரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து அமீரிடம் 5 நாட்கள் போலீசார் விசாரிக்க உள்ளனர். அப்போது ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என அவரை ஏ.டி.எம். மையங்களுக்கு அழைத்து சென்று போலீசார் முன்னிலையில் நடித்து காண்பிக்க கூறி அதை வீடியோ பதிவு செய்யவும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் குறித்தும் அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.

Next Story