9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஷகீல் அக்தர் நியமனம் எம்.ரவி, நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆனார்
தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஷகீல் அக்தரும், சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக எம்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. ஷகீல் அக்தர், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுகிறார்.
* சென்னை நிர்வாக பிரிவு சிறப்பு டி.ஜி.பி. கந்தசாமி, ஊழல்-லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
* ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.
ஈஸ்வரமூர்த்தி
* உளவுப்பிரிவு ஐ.ஜி. சி.ஈஸ்வரமூர்த்தி உள்நாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
* தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. ஆசியம்மாள், உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்படுகிறார்.
* திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.அரவிந்தன் சி.ஐ.டி. சிறப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தூத்துக்குடி பேரூரணி போலீஸ் ஆள்சேர்ப்பு பள்ளியின் முதல்வரான போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சரவணன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு (2) ஆனார்.
திருநாவுக்கரசு
* சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆர்.திருநாவுக்கரசு சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு (1) போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை போலீஸ் நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் பி.சாமிநாதன் சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவு (2) போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story